512 பேருக்கு பொதுமன்னிப்பு! அறிவிப்பை வெளியிட்டாா் – ஜனாதிபதி

இலங்கையின் சுதந்திர தினத்தை ஓட்டி 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் தீா்மானத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் இவா்கள் விடுதலை செய்யப்படவுள்ளனா்.

அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படி ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த பொது மன்னிப்பினை இந்த பொதுமன்னிப்புவழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்றவர்கள் திருட்டு, நம்பிக்கை மீறல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர்.

பாலியல் வன்முறை, கொள்ளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சம் பெறல் போன்ற பெருங் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் யாரும் இந்த விடுவிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி அன்று சிறையில் இருந்த கைதிகளுக்கு மட்டுமே இந்த பொது மன்னிப்பு பொருந்தும்.

Related Posts