ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.
இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.
மனிதஉரிமை பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமையாளர் ஆணையாளர் தலைமையில் இன்று 51 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பகமாகவுள்ளது.
இதில் முதலாவதாக உலக நாடுகளின் மனிதஉரிமை நிலைமை தொடர்பாக ஒரு நீண்ட அறிக்கையை ஆணையாளர் பச்செலட் வெளியிடவிருக்கின்றார்.
அதன் பின்னர் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் வெளியிடுவார்.
2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 46/1 என்ற பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது மற்றும் இலங்கையின் மனிதஉரிமை நிலைமைகள் என்ன? பொறுப்புக்கூறல் விடயத்தில் அடுத்து என்ன செய்யலாம் போன்ற விடயங்கள் தொடர்பாகவே ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கை ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் அதன் சாரம்சத்தை ஆணையாளர் நாளை வாசிக்கவிருக்கிறார்.
அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பேரவையில் உரையாற்றவிருக்கின்றார். இதன்போது இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் எவ்வாறு செயற்படுகின்றது, பயங்கரவாத தடை சட்டம் எவ்வாறு திருத்தப்படும் என்பன தொடர்பாகவும் அரசாங்கம் உள்ளக பொறிமுறையை முன்னெடுக்கவுள்ளதாகவும் பேரவைியல் அலிசப்ரி அறிவிக்கவிருக்கின்றார்.
தொடர்ந்து இலங்கை குறித்தவிவாதம் ஜெனிவா பேரவையில் நடைபெறும். இதில் உறுப்பு நாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு இலங்கை தொடர்பாக உரையாற்றவிருக்கின்றனர்.
இம்முறை இலங்கையின் சார்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இரண்டு அமைச்சுகளினதும் உயரதிகாரிகள் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சென்றுள்ளதுடன். அவர்கள் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் .
பெட்ரிகோ விலிகஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போதுஉள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் அவரிடம் மீளவலியுறுத்தியுள்ளது.
இச்சந்திப்பின்போது மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் முயற்சிகள் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.