5000க்கு மேற்ப்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள திட்டம்!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில ஆகிய 5 ஆயிரத்து 315 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தேசிய பாடசாலைகளுக்காக அமைச்சு மட்டத்திலும், மாகாணங்களுக்குட்பட்ட பாடாசலைகள் அந்தந்த மாகாணங்கள் ஊடாகவும் நிரப்பபடவுள்ளன.

இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான இறுதிப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதிக்குள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் நிலவும் வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரல் அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதன்கீழ் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய சகல ஆசிரியர் வெற்றிடங்களும் நிரப்பபடவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 1134 வெற்றிடங்களும், மேல் மாகாணத்தில் 157 வெற்றிடங்களும் நிரப்படவுள்ளன.இதுதவிர, மத்திய மாகாணத்தில் 930 ஆசிரியர் வெற்றிடங்களும், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் முறையே 500 மற்றும் 569 வெற்றிடங்கள் நிரப்பபடவுள்ளன.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு.

Related Posts