Ad Widget

50% அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளர்

பல்கலைக்கழகத்தினுல் நம்பமுடியாத சித்திரவதைகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

mohan-laal-kiraruu

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது, பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து, 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் இவ்வாறான பகிடிவதைகளை எதிர்ப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு உளவள சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் மொஹான் லால் கிரேரு மேலும் கூறியுள்ளார்.

Related Posts