கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார நிலையத்தில் 50 ரூபாய்க்கு சிகையலங்காரம் செய்ய முடியும்.
இராணுவத்தினரின் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த சிகையலங்கார நிலையங்களில், கட்டணம் குறைவு காரணத்தால் பொதுமக்களும் செல்கின்றனர்.
இராணுவத்தினர் சிகையலங்கார நிலையம் நடத்துவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சிகையலங்கார சங்கத் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் செவ்வாய்க்கிழமை (09) முறைப்பாடு செய்தனர்.