Ad Widget

5 வயது மகனை தாயிடம் சேர்த்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

பதினொரு மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தந்தையால்இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 5 வயது சிறுவன் அவனுடைய தாயோடு சேர்க்கப்பட்டுள்ளான்.

இப்திகார் அகமத் என்கிற அந்த சிறுவன், சனிக்கிழமையன்று இரு அண்டை நாட்டு பிராந்தியங்களின் முக்கிய எல்லை பகுதியில் வைத்து பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான்.

திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு தந்தை குல்சார் அகமத் தான்ட்ரே, அந்த சிறுவனை இந்தியாவுக்கு கொண்டு வந்திருந்தார்.

இப்திகாரை திருப்பி வழங்கியுள்ளமைக்கு இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்திருக்கிறது.

“இதுவொரு “அற்புதம்” என்று விவரித்து, “என்னுடைய குழந்தையை திரும்ப பெற்றுகொள்வதில் எனது நம்பிக்கையை எல்லாம் இழந்துவிட்டிருந்தேன்” என்று இப்திகாரின் தாய் ரோகினா கயானி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அரசு வழங்கியிருக்கும் உதவிக்கு நன்றி கடமை பட்டுள்ளேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இப்போது தந்தை தான்ட்ரே இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் வாழ்ந்து வருகின்ற நிலையில், தாய் கயானி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் வாழ்கிறார்.

2016 ஆம் ஆண்டு தான்ட்ரே கைது செய்யப்பட்டபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சையின் மையமாக சிறுவன் இப்திகார் மாறினார்.

கான்டர்பாலிலுள்ள கிராமம் ஒன்றில் வளர்ந்த தான்ட்ரே, 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்கு கடந்து சென்றார். இந்தியாவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தின்போது, ஆயுத பயிற்சிக்கு சென்றதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

தான்ட்ரே, மகன் இப்திகாரோடு இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதிக்கு திருப்பியபோது, காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டார்.

அந்த வேளையில், தன்னுடைய மகனை கணவன் கடத்தி கொண்டு இந்திய கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுவிட்டதாக ரோகினா கயானி குற்றஞ்சாட்டியிருந்தார்.

தான்ட்ரேவும், அவரது குடும்பமும் குழந்தையை கடத்திய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

Related Posts