5 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts