5வது ஒருநாள் போட்டியையும் வென்று இந்திய அணி அபாரம்

5வது ஒருநாள் போட்டியையும் இந்திய அணி வென்றது. இந்தியா-இலங்கை அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் அதிகபட்சமாக 139 ரன்களை குவித்தார்.

koly-cricket-india

287 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோஹ்லி 139(126) ரன்கள் விளாசினார். இதனையடுத்து 5-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் தலைவர் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார். இரு அணித்தலைவர்களும் இப் போட்டியில் 139 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts