42 வேட்பாளர்கள் உட்பட 373 பேர் கைது

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

அதன்படி தேர்தல் சம்பந்தமாக இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 42 வேட்பாளர்கள் உட்பட 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts