4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: முதியவர் கைது

arrest_14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 வயது முதியவரை கைதுசெய்துள்ளதாக யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவரே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார். இச்சிறுமி அதே இடத்தில் ஆங்கில வகுப்பிற்கு சென்று வரும்போது, மேற்படி முதியவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதை கண்டவர்கள் இதுதொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர் யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த முதியவரை கைதுசெய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Posts