36 வகை பயிர்ச் செய்கைக்கு 4 சதவீத வட்டியில் 5 லட்சம் ரூபாய்வரை விவசாயக் கடன்

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ள இந்தக் கடனின் மீளச் செலுத்தும் காலம் 9 மாதம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

கடன் திட்டத்திற்கு அமைவான பயிர்களாக நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி, கோவா, கரட், கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு

அத்துடன் சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின் கீழான கடன் நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க உச்சபட்சமாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவி 4 சதவீத வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்க மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கு அரசின் மூலம் 5 சதவீத பங்களிப்பும், கடன் பெறுனரிடமிருந்து 4 சதவீத வட்டியும் அறவிடப்படும் என, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

Related Posts