தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது.
குறித்த குழுவில் 16 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
2011ம் ஆண்டு முதல் 4799 அகதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.