36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் அமைச்சர் ஒருவரின் கையில் தற்காலிகமாக காவல்துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிகமாக காவல்துறைத் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிவகித்தபோது, அப்போது உள்நாட்டு அமைச்சராக இருந்த கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்குப்பின்னர் காவல்துறை அமைச்சு எந்தவொரு தமிழருக்கும் வழங்கப்படாத நிலையில் தற்போது தற்காலிகமாக 36 ஆண்டுகளுக்குப்பின்னர், இரண்டு கிழமைகளுக்கு, மீள் குடியேற்ற அமைச்சராக இருக்கும் டி.எம்.சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் சாலக ரத்நாயக்க தற்போது வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதால், தற்காலிகமாக டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.