நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் 35 தமிழ் யுவதிகள் இராணுவத்திற்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவது;-
யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தின நிகழ்வுத்திடலில் நேற்று திங்கட்கிழமை காலை இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த அதிகமான தமிழ் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். யாழ்.மாவட்ட இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான அஜித் மல்லவராட்சி மற்றும் பெண் இராணுவ அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டு தமிழ் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வினை நடத்தியிருந்தனர்.
இதன் போது 100 இற்கும் மேற்பட்ட தமிழ் யுவதிகள் நேர்முகத் தேர்வில் தோற்றியிருந்தனர். இவ்வாறு நேர்முகத் தேர்வில் தோற்றியிருந்தவர்களில் 35 பேர் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.