இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் – அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும்.
பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு பதாகையில் அந் நிபந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி,
-
குறித்த வீதி காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாத்திரமே திறக்கப்படும்.
வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடைநடுவில் நிறுத்துதல, திருப்புதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீதியின் இரு பக்கத்தையும் புகைப்படம் எடுத்தல் அல்லது காணொளி எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
வீதியில் நடை பயணம் செய்யத் தடை.
பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர பாரவூர்திகள் பயணிக்கத் தடை.
ஆகக்கூடியது 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை செலுத்த முடியும்.
வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் அனைவரும் தங்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பின்பற்றாவிடின் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் குற்றம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 34 வருடங்களின் பின் இவ் வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.