34 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதாக உறுதி

Human_rightsவன்னிக்கு ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்ட 34 ஆசிரியர்களுக்கும் யாழ். வலயத்தில் இடமாற்றம் வழங்குவதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா உறுதி அளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் 34 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.

இம்முறைப்பாட்டின் பிரகாரம் மனித உரிமை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா அடுத்தகட்ட ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்படும் போது, வெளிமாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படும்.

இதன்போது பாதிக்கப்பட்ட 34 ஆசிரியர்களுக்கும் யாழ்.வலயத்தில் இடமாற்றம் வழங்கப்படும் என்றும் இந்த உடன்படிக்கையை ஜுலை 31ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளாதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts