புனேயில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்தியா 105 ரன்களில் நடையை கட்டியது. 143 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவில் ஆட்டத்தின் 2வது நாளான நேற்று தனது 2வது இன்னிங்ஸ் ஸ்கோரை முடித்துக்கொண்ட ஆஸி. இன்று ஆட்டத்தை தொடர்ந்தது. 59 ரன்களுடன் நேற்று களத்தில் நின்ற அந்த அணி கேப்டன் ஸ்மித் இன்று சதம் விளாசினார். 109 ரன்களில் ஜடேஜா அவரை எல்பிடபிள்யூ செய்தார்.
285 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. இந்தியாவுக்கு 441 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் 418 ரன்களுக்கு மேல் விரட்டி வெற்றி பெற்ற அணி இதுவரை கிடையாது.
இந்தியா இதை செய்திருந்தால் அது உலக சாதனை. ஆனால் இந்தியா 107 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
புஜாரா அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். கோஹ்லி 13 ரன்கள் எடுத்தார். ஆஸி. தரப்பில் முதல் இன்னிங்சை போலவே இம்முறையும் ஒகீபே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய வெற்றிக்கு வழி வகுத்தார்.