323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் – கிரிக்கெட் உலகின் புதிய சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

Pranav Dhanawade-cricket-1009-

இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே இந்த இலக்கை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர் ஆவார். இவர் பண்டாரி கிண்ணத்துக்காக பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ஆர்ய குருகுல பாடசாலைக்கு எதிரான போட்டியில் 323 பந்துகளில் 1009 ஓட்டங்களைக் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Pranav Dhanawade-cricket-1009-2

மேலும் முன்னதாக பிரிட்டனில் ஏ.இ.ஜே.கொலின்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட முறையில் எடுத்த 628 ஓட்டங்கள் என்பதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. இதனை பிரணவ் முறியடித்துள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 395 நிமிடங்கள் கிரீசில் இருந்த பிரணவ் 1009 ஓட்டங்களில் 129 பவுண்டரிகள் மற்றும் 59 சிக்சர்களையும் விளாசியுள்ளார். ஓட்ட எண்ணிக்கை 1465யை எட்டியபோது காந்தி மேனிலைப்பள்ளி இன்னிங்ஸை இடைநிறுத்துக் கொண்டது.

இந்த ஓட்ட எண்ணிக்கையும் ஒரு உலக சாதனையே. 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ஓட்டங்களை எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை பிரணவின் இமாலய இன்னிங்ஸினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரணவ்வின் இந்த இமாலய சாதனையில் நெகிழ்ச்சியடைந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

Related Posts