32 சாதனைகள் முறியடிக்கப்பட்டன

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் இதுவரையில் 32 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்தார்.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி போட்டிகளின் முதலாம், மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும், நான்காம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்று முடிந்தன.

5 ஆம் கட்டப் போட்டிகளான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் திங்கட்கிழமை (23) முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை (27) ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள மேற்படி போட்டிகளில், இதுவரையில் 32 முன்னைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இதுவரையிலும் முடிவடைந்த தடகள மைதான நிகழ்வுகளின் அடிப்படையில் வலிகாமம் கல்வி வலயம் 248 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

sports

Related Posts