31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை ​செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை அவர்களை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts