30 வருடங்களுக்கு பின் நடிகர் ஒருவரை வாழ்த்திய விஜய்யின் அம்மா!

துருவங்கள் பதினாறு படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதாக நடிகர் ரகுமானை விஜய்யின் அம்மா ஷோபா வாழத்தியுள்ளார்.

1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழந்தவர் ரகுமான். இடையே நடிக்காமல் இருந்தவர் இயக்குநர் அமீரின் ராம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

அதன் பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

பலரும் நடிகர் ரகுமானை பாராட்டி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவும் ரகுமானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

ரகுமான் 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் நிலவே மலரே நடித்தார். அப்போது ஷீட்டிங் தளத்திற்கு வரும் விஜய்யின் அம்மா ஷோபா அவ்வப்போது ரகுமானை பாராட்டுவாராம்.

அதன் பிறகு 30 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ள துருவங்கள் பதினாறு படத்தை பார்த்த ஷோபா, ரகுமானை மனதார பாராட்டியுள்ளார். இதனை மிகவும் நெகிழ்ச்சியுடன் ரகுமான் கூறியிருக்கிறார்.

Related Posts