30 நிமிடங்கள் உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது

சமூக வலைதளமான பேஸ்புக் நேற்று அரை மணிநேரம் முடங்கியது. உலகம் முழுவதும் அதை பயன்படுத்தும் 120 கோடி பேர் இதனால் விரக்தியடைந்தனர்.

facebook-error

பயனாளிகள் பேஸ்புக் இணையதளத்துக்கு சென்றபோது, “சில காரணங்களால் தற்போது பயன்படுத்த முடியாது. விரைவில் இது சரி செய்யப்படும்“ என்ற செய்தியே வந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

முன்னதாக காலையில் பேஸ்புக்கில் சிலர் தங்களுடைய செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இந்தாண்டு பிப்ரவரியில், அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டும் பேஸ்புக்கை சில மணி நேரம் பயன்படுத்த முடியாமல் போனது. கடந்த அக்டோபர் மாதத்தில் பராமரிப்பு காரணத்துக்காக சில மணி நேரம் உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்த முடியவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Posts