30 ஆண்டுகளுக்குப்பின் மயிலிட்டி கண்ணகியை தரிசிக்கும் மக்கள்!

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

mayilidi-kanakai

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

மயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி மறுத்துவந்த படைத்தரப்பு இன்று அந்தப் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வாறு வழிபாட்டுக்குச் செல்லும் மக்கள் காங்கேசன்துறைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதியில் படையினரின் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படை வாகனங்களில் ஏற்றி ஆலயப் பகுதிக்கு கொண்டுசென்று விடப்பட்டனர்.

இதுவரையில் 150 இற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு சென்றிருக்கின்றனர் எனவும் மேலும் மக்கள் அங்கு செல்வதற்காக தயாராக இருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது.

Related Posts