3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – 3 பிள்ளைகளும் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றிற்குள், நேற்று (3) மாலை இந்த அனர்த்தம் நடந்தது.

கணவருடன்ஏற்பட்ட தகராறையடுத்து தனது பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்தார். 2, 5, 8 வயது பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்தாார்.எனினும், கிணற்றிற்குள் விழுந்த பின்னர் அவர் கிணற்று படிக்கட்டில் பிடித்து நீருக்கு மேலே மிதந்து விட்டார். அவரை ஊர் மக்கள் காப்பாற்றினர்.

பின்னர் கிருபாகரன் டினோஜன் (2) என்ற மகன் சடலமாக மீட்கப்பட்டார். மற்றைய இரண்டு பிள்ளைகளையும் நீண்டநேரமாக கண்டபிடிக்க முடியவில்லை.

நீண்ட தேடுதலின் பின்னர் நேற்று பின்னிரவில் இரண்டு சடலங்களும் கிணற்றின் அடியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இன்று நீதிமன்ற உத்தரவை பெற்று அவை மீட்கப்படவுள்ளன.

கிருபாகரன் அக்சயா (5), கிருபாகரன் பிருத்திகா (8) ஆகிய பிள்ளைகளின் சடலங்களே கிணற்றிற்குள் உள்ளன.

Related Posts