3 நாளுக்கு முன் மருதனார்மடம் வந்த பருத்தித்துறை வாசிக்குக் கோரோனா தொற்று!!

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார்.

பின்னர் காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் முன்னெடுத்த பிசிஆர் பரிசோதனையில் மாதிரிகளை மீளப்பெறுமாறு அறிக்கையிடப்பட்டது.

எனினும் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts