3 ஆவது முறையும் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் ?

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடாகும்.

mahintha

அதனை யாராலும் சவாலுக்கு உட்படுத்த முடியும். அவ்வாறு சவாலுக்கு உட்படுத்தினால் நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு பெறப்படும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டால் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts