3 மாதங்களில் முகப்புத்தக மோசடி குறித்த முறைப்பாடுகள் அதிகம்

cyber-crimeஇவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இணையம் குறித்து 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அதிகம் ´பேஸ்புக்´ எனப்படும் முகப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகள் என அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போலி முகப்புத்தக கணக்கு, வேறு நபர்களின் முகப்புத்தக கணக்கில் அநாவசியமாக உள்நுழைதல் போன்றவை குறித்தே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில மதங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் முகப்புத்தக கணக்கு குறித்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

Related Posts