29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா அஜித்?

தல 57 படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து சாகசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தல 57. இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்து வருகிறாராம்.

டூப் வைத்துக் கொள்ளுமாறு சிவா கூறினாலும் அஜீத் கேட்பது இல்லையாம்.

பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.

தல 57 படம் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. அஜீத் படங்களில் இது தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபீஸில் அஜீத் ஓபனிங் கிங் என்பதால் பட்ஜெட் எகிறியபோதிலும் போட்டதை எடுத்துவிடலாம் என தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் உள்ளாாராம்.

Related Posts