281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

CRICKET-SRI-AUS

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி ஏற்கனவே ஒரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நேற்று காலியில் ஆரம்பமானது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, குஷல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஏனைய வீரர்கள் அதனை விடக் குறைவான ஓட்டத்தைப் பெற்ற நிலையில் வௌியேற, 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்த இலங்கை, 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்ராக் (Mitchell Starc) 44 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. நேற்றய ஆட்ட நேர முடிவில் அவ்வணி 54 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

Related Posts