271 இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி டி காக்கின் சதத்தால் (103) 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது.

Morne Morkel

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவின் ஆக்ரோஷ பந்து வீச்சால் இருவராலும் அதிரடியாக ஆட முடியவி்ல்லை. இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் 40 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் ஸ்கோர் 41 ரன்னாக இருக்கும்போது தவான் அவுட் ஆனார். மோர்னே மோர்கல் விசிய பந்தில் விக்கெட் கீப்பர் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ரகானேவிற்குப் பதிலாக விராட் கோலி களம் இறங்கினார். இதற்கிடையில் இந்தியா 12.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரோகித் சர்மா 65 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியா 21.2
ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அரைசதம் அடித்து விளையாடிய ரோகித் சர்மா 65 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 74 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் முதலில் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால், நேரம் ஆகஆக தடுத்து ஆட ஆரம்பித்தனர். இதனால் இந்தியா 30.1 ஓவரில்தான் 150 ரன்னைத் தொட்ட்து. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 119 பந்தில் 121 ரன்கள் தேவைபட்டது.

அதில் இருந்தே இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. விராட் கோலி 64 பந்தில் அரை சதம் அடித்தார். டோனி 61 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 41.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்தியாவின் வெற்கிக்கு 49 பந்தில் 78 ரன்கள் தேவைபட்டது.

டோனி அவுட்டானதைத் தொடர்ந்து ரெய்னா களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து ரகானே களம் இறங்கினார்.

இந்தியாவிற்கு 46-வது ஓவரில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் விராட் கோலியும், 2-வது பந்தில் ரகானேவும் அவுட் ஆனார்கள். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த பட்டேல் 15 ரன்னும், ஹர்பஜன் சிங் 20 ரன்னும் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 6 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோலி 99 பந்தில் 77 ரன்களும், ரகானே 7 பந்தில் 4 ரன்களும் எடுத்தனர்.

மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்திய வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மோர்கல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

4-வது போட்டி சென்னையில் 22-ந்தேதி நடக்கிறது. இது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும்.

Related Posts