27 வருடங்களாக மாகாண சபையை வேண்டாமென எதிர்த்வர்கள் இன்று இத் தேர்தல் களத்தில் நிற்பது ஏதற்காக? – அங்கஜன்

angajan-araly-meetingஎமது கடந்த கால அரசியல் போராட்டங்களில் நாம் கண்டவை என்ன? இன்று அப்போராட்டங்களினால் எம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அதற்காக நான் இப் போரட்டங்களை தவறாக கூறவில்லை. ஆனால் அவை பலனாற்று போய் விட்டது. இனியும் போரட எம்மால் முடியாது. இளைப்பாறுவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அராலி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இப் பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வட்டுக்கோட்டை தொகுதியில் அமைந்துள்ள அராலி பிரதேச மக்கள் மத்தியில் பேசுவதில் பெருமை அடைகின்றேன். வட்டுக் கோட்டை தொகுதியிலேயே என்னால் பெருமளவிலான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

நான் அரசியலுக்கு கடந்த பாரளுமன்ற தேர்தல் மூலம் உள்ளே வந்தேன். வந்து அத் தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை. வெற்றி பெறவில்லை என்று உங்களை விட்டுச் செல்லவில்லை. இங்கிருந்து இத்தனை பணிகளை உங்களுக்காக செய்துள்ளேன். கடந்த 3 வருடங்களாக எமது மக்களின் சுய அபிவிருத்திக்காக போராடி வருகின்றேன். இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றேன். எம் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க போராடி வருகின்றேன்.

எமது கடந்த கால அரசியல் போராட்டங்களில் நாம் கண்டவை என்ன? இன்று அப்போராட்டங்களினால் எம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அதற்காக நான் இப் போராட்டங்களை தவறாக கூறவில்லை. ஆனால் அவை பலனற்று போய் விட்டது. இனியும் போராட எம்மால் முடியாது. இளைப்பாறுவோம். அதாவது தற்காலிகமாக சிறிது காலம் இளைப்பாறுவோம். எம் மூத்த சந்ததி போராடியது. நாமும் போரடினோம் எம் எதிர்கால சந்தததியும் போராட வேண்டுமா? இவ்வளவு காலம் போன்று இனியும் எம் பிரதேசம் அபிவிருத்தயில் பின் தங்கிய நிலையில் இருக்க வேண்டுமா? இல்லை.

அந்த நிலைமை மாற வேண்டும். அதற்காக நாம் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஆளும் தரப்போடு இணைந்து போய் எமக்கான அபிவிருத்தியை பெற்று அதனுடாக எமது உரிமையை பெற்றுக் கொள்வோம். அரசாங்கம் என்றுமே தம்மை எதிரியாக நினைப்பவர்கட்கு உதவிகளை வழங்காது. அவர்களுடன் இருப்பவர்களுக்கே வழங்கும். அது அவர்களது கட்டாய தேவையும் கூட. எனவே நாம் இனியும் பிடிவாதங்களை பிடிக்காமல் இம் மாகாண சபையில் அபிவிருத்தியை எவரால் மேற் கொள்ள முடியும் என இனங்கண்டு அவர்கட்கு வாக்களிக்க வேண்டும்.

எமக்காக உருவாக்கப்பட்ட இம் மாகாண சபையை இது வரை காலமாக எம் மக்கள் அனுபவிக்க முடியவில்லை. மாறாக நாட்டின் ஏனைய பகுதி மக்கள் மாகண சபையின் ஊடாக அபிவிருத்திகளையும் வாழ்வதார மேம்பாடுகளையும் பெற்று வருகின்றனர். இது எமக்கு கிட்டாமல் போனது எத்தகைய அரசியல் அணுகு முறையால் என்று சிந்தித்து பாருங்கள். அவர்களது எதிர்ப்பு அரசியலினால் எம்மவர்களை நாமே ஆளுகின்ற வாய்ப்பொன்றைக் கூட அவர்களால் மக்களுக்கு பெற்று கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அதற்கு முயற்சிக்கவில்லை. இன்று எம் மக்களுக்காக எம் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்துகின்றது. 27 வருடங்களாக மாகாண சபையை வேண்டாமென எதிர்த்வர்கள் இன்று இத் தேர்தல் களத்தில் நிற்பது ஏதற்காக. எனவே நீங்கள் சிந்திக்க வேண்டும். தொடர்ந்தும் ஏமாற்று அரசியலினால் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். எமது மக்களுக்கான அனைத்தும் அவர்களுக்கு எந்த தடையும் இன்றி கிடைக்க வேண்டும். இதற்காக மக்களோடு நின்று சேவைகள் புரிபவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். என்றார்

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ச மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts