27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு இன்று முதல்

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக உள்ளது.

 

  • வெள்ளை அரிசி ஒரு கிலோ 93 ரூபா
  • வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ 96 ரூபா
  • சம்பா ஒரு கிலோ 99 ரூபா
  • கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபா
  • கோதுமை மா ஒரு கிலோகிராம் 84 ரூபா
  • வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 99  ரூபா
  • சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபா
  • தேயிலை தூள்  100கிராம் பெக்கட் 95 ரூபா
  • சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 165 ரூபா
  • பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபா
  • உருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம் 180 ரூபா
  • உருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் 140 ரூபா
  • கடலை ஒரு கிலோகிராம் 175 ரூபா
  • உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் 495 ரூபா
  • டின் மீன் 425 கிராம் 220 ரூபா
  • டின்மீன்(இறக்குமதி)265 ரூபா
  • நெத்திலி 1கிலோகிராம் 575 ரூபா
  • கோழியிறைச்சி ஒரு கிலோகிராம் 400 ரூபா
  • உப்பு  ஒரு கிலோகிராம் 43 ரூபா
  • பால்மா 400 கிராம் 355 ரூபா
  • சோயா எண்ணெய் 500 மி.லீ.310 ரூபா
  • ஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் 43 ரூபா
  • பார் சவர்காரம் 650 கிராம் 260 ரூபா
  • வாசனை சவர்காரம் 100 கிராம் 56 ரூபா
  • பற்பசை 250 ரூபா
  • முகக்கவசம் 14  ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Related Posts