250 கோடி பேருக்கு ஸிகா வைரஸ் அச்சுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர், ஸிகா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அத்தகைய பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

`தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வில், பெரும்பான்மையான மக்கள், ஸிகா வைரஸை தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாத சூழலில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளி்ல் உள்ள மக்கள் அதிக அளவு இந்த வைரஸால் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், ஏற்கெனவே, வெளியில் வராத பல வைரஸ் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதையும் அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.

ஸிகா வைரஸ், கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களுக்கு மூளைப் பாதிப்பை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Posts