25 ஓட்டங்களால் இலங்கை அணிக்கு வெற்றி

கொழும்பில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

dilshan

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் தில்ஷான் 88 ஓட்டங்களையும் குசால் பெரேரா 59 ஓட்டங்களையும் மஹீல ஜயவர்த்தன 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் திரேட்வெல் மற்றும் வோர்க்கர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து சார்பில் அலி 119 ஓட்டங்களையும் பொப்பாரா 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் பெரேரா 3 விக்கெட்களையும் ஹெரத், மென்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts