25 ஆண்டுகளுக்குப்பின் இணைந்து நடிக்கும் ‘சின்னத்தம்பி’கள்!!

25 ஆண்டுகளுக்குப்பின் நடிகர் பிரபுவுடன் இளம் நடிகர்களில் ஒருவரான சக்திவாசு இணைந்து நடிக்கவிருக்கிறார்.

prabhu-sakthi-vasu

இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி வாசு தற்போது 7 நாட்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கவுதம் இயக்கும் இப்படத்தில் சக்திக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 2 வது கட்ட படப்பிடிப்பில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப்பின் பிரபு-சக்திவாசு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிரபு-குஷ்பூ நடிப்பில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய சின்னத்தம்பி படத்தில் சிறுவயது பிரபுவாக சக்திவாசு நடித்திருந்தார்.

இருவரும் படத்தில் சேர்ந்து வரும் காட்சிகள் திடீர் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக படக்குழு விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறது.

Related Posts