25வது நாளில் ‘கபாலி’

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 22-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

kabali-25

படம் வெளியானதுமே படம் பற்றி இருவேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலர் வேண்டுமென்றே படத்தைப் பற்றி குறை கூறிப் பேசி வந்தார்கள். ரஜினிகாந்த் அவரது வயதுக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தது அவருடைய ரசிகர்களுக்கே பிடித்த போது, சிலர் அப்படி நடித்திருக்கக் கூடாது என்றார்கள். ஆனால், அவர்கள்தான் ‘லிங்கா’ படம் வந்த போது இன்னும் இளம் ஹீரோயின்களுடன் ரஜினி டூயட் பாட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

‘கபாலி’ படத்தைப் பற்றியும், ரஜினி படத்தைப் பற்றியும் எதிர்த்துப் பேசினால் தங்களது பதிவுகளையும் வீடியோக்களையும் அதிகம் பேர் பார்ப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்ட விட்டில் பூச்சி விமர்சகர்கள் பலரும் விமர்சனங்களை வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள் கூட அதிகம் ரசிக்கப்பட்டது அவர்களுக்காக அல்ல அவையனைத்தும் ‘கபாலி’ படத்திற்காகவும், ரஜினிக்காகவும்தான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காதா என்ன..?.

படம் வெளிவந்து நான்கு வாரங்கள் ஆகியும் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பல தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக இருந்தது என தியேட்டர்களில் படம் பார்த்தவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்க முடிந்தது.

முதல் வாரத்திலேயே 300 கோடி வசூல் என்று வசூலிலும் சாதனை புரிந்தது ‘கபாலி’ படம். படத்தைப் பற்றி என்ன மாதிரியான விமர்சனம் வந்தாலும் அது நல்ல படத்தைப் பாதிக்காது என்பதை ‘கபாலி’ படம் உணர்த்தியிருக்கிறது. ரஜினிகாந்தின் வித்தியாசமான படங்களின் பட்டியலில் ‘கபாலி’ இணைந்துவிட்டது.

Related Posts