247 பேரை காவுகொண்டது இத்தாலியின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இத்தாலியின் மையப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியை 6.2 ரிக்டர் அளவில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 368 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

it

குறித்த அனர்த்தத்தில் பல கிராமங்கள் பேரழிவை எதிர்நோக்கியுள்ளன. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், சுமார் 4 ஆயிரத்து 300 மீட்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள உயிரிழப்பு எண்ணிக்கையைவிட மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக இத்தாலி பிரதமர் மரியோ ரென்ஸி குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களுள் 18 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது தாயார் கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய இத்தாலியின் அக்விலா பிராந்தியத்தில் 300 பேரை காவுகொண்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திலிருந்து உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts