24 வருடங்களின் பின்னர் யாழ் வந்தது யாழ்தேவி

யாழ்.புகையிரத நிலையத்தை யாழ். தேவி வந்தடைந்தது

பளை – யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ரயில் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 24 வருடங்களின் பின்னர் யாழ். தேவி மீண்டும் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

train-yarl-devi-1

எனினும் இதுவரை பல தடவைகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதும் பாதை புனரமைக்கப்படாமையினால் சேவை இடம்பெறவில்லை.

இருப்பினும் தற்போது ஓரளவுக்கு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளோட்டம் இடம்பெற்றது. அதுபோல இன்றும் பரிட்சார்த்த ரயில் சேவை நடைபெறவுள்ளது.

train-yarl-devi-2

எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோக பூர்வமாக ரயில் சேவையினை ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நீண்ட காலத்திற்குப் பின்னர் ரயில் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையால் சிறுவர்கள் ரயில் தண்டவாளத்திற்குள் குற்றிக் காசுகளை வைத்து குதூகலித்து மகிழ்ந்தனர்.

யாழ் தேவியை பார்க்கவென மக்கள் கூட்டம் அலை மோதியது. அதற்குள் வயது வேறுபாடு இன்றி அனைவரும் ரயிலைப் பார்க்க காத்திருந்தனர். ரயிலும் வந்தது. சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் குற்றிக் காசுகளை வைத்து அது என்ன நிலையில் ரயில் சில்லுகளுக்குள் அகப்பட்டு வருகின்றது என்பதை அறியும் ஆர்வத்துடன் செயற்பட்டனர்.

அவர்கள் வைத்த 5 ரூபா குற்றி சில்லுக்குள் அகப்பட்டு முட்டை வடிவில் வந்திருந்தது. இதனைக் காட்டி எல்லோரும் ஆரவாரித்தனர்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் உயிரைப் பறித்துச் செல்லும் நிலை கூட எதிர்காலத்தில் ஏற்படலாம் எனவே சிறுவர்களை காக்க வேண்டியது பெற்றோர்களது கடமையாகும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

Related Posts