24 மணிநேரத்தில் 24 நிலநடுக்கங்கள்: அச்சத்தில் கலிஃபோர்னிய மக்கள்

கலிஃபோர்னியா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மத்திரம் 24 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கலிஃபோர்னியாவின் சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உட்பட பல பகுதிகளில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

இதனால் அச்சமடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கலிஃபோர்னியாவின் அண்டை மாநிலமான நெவாடாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவு கோலில், 3 – 5.6 ரிக்டர் வரையில் பதிவாகியுள்ளன. ஆயினும் குறித்த நிலநடுக்கங்களின் போதான சேதவிபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை கடந்த வாரத்திலும் கலிஃபோர்னியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Related Posts