24 டைம் மிஷின் கதைதான்: உறுதி செய்தார் இயக்குனர்

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் படம் 24. யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார்.

soorya-24

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று நேற்று நாளை டைம் மிஷின் பற்றிய படம். அதைபோன்ற கதைதான் 24ம் என்று கூறப்பட்டது. அதனை இப்போது இயக்குனர் விக்ரம் குமார் உறுதி செய்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:

டைம் மிஷனை வைத்து நிறையப் படங்கள் வந்திருக்கிறது. இது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். சூர்யா ஹீரோவாகவும், வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இன்றைய காலகட்டம், 25 வருடங்களுக்கு பிந்தைய காலம் என்ற இரு களங்களில் கதை நடக்கிறது.

25 வருடத்துக்கு முந்தைய காலகட்ட காட்சிகள் போலந்து நாட்டில் படமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியை மும்பையில் செட் அமைத்து படமாக்கினோம். இன்றைய கால கட்ட கதை சென்னையில் நடப்பது மாதிரி இருக்கும்.

படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ரகுமான் பின்னணி இசை அமைத்து வருகிறார். படத்தில் 20 சதவிகித கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. சென்னை மற்றும் மும்பையில் அந்தப் பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளிவருகிறது.

Related Posts