23ம் திகதி பைரவா இசை வெளியீடு

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது.

பைரவா படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் பைரவா படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பைரவா படத்தின் இசை வெளியீடு டிச., 20 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியானது.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் பைரவா இசை வெளியீடு வேண்டாம் என்றும் எளிமையாக நேரடியாக கடைகளில் படத்தின் பாடல்களை வெளியிட விஜய் கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பைரவா படத்தின் பாடல்கள் கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிற டிச., 23ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ விழாவாக இல்லாமல் நேரடியாக கடைகளில் பைரவா பாடல்கள் விற்பனைக்கு வர உள்ளது. விஜய் படத்திற்கு முதன்முறையாக சந்தோஷ் நாரயணன் இசையமைப்பதால் பைரவா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts