22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி!

22 வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. நக்மா, ரகுவரன், யுவராணி உள்பட பலர் நடித்த அப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

அப்படம் ரஜினி படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படமானது. அதோடு, இப்போதும் தான் நடித்த படங்களில் தனக்கு அதிகம் பிடித்தமான படமாக ரஜினி குறிப்பிடுவதும் பாட்ஷாவைதான். அந்த அளவுக்கு ரசிகர்களைப்போலவே அவருக்கும் அது பேவரிட் படமாகி விட்டது.

இந்த பாட்ஷா படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கிலும் வெளியிட்டுள்ளனர். அப்படி சென்னையில் கமலா தியேட்டரில் வெளியான பாட்ஷா படம் முதல்நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, அன்றைய தினத்தில் அதே தியேட்டரில் ரிலீசான சாந்தனுவின் முப்பரிமாணம், கிருஷ்ணாவின் யாக்கை படங்களின் வசூல் ரஜினியின் பாட்ஷாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

Related Posts