22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு

இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும் அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரியுமே இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர்.

Related Posts