216 தமிழ்க் கைதிகள் குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 216 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய, இந்த அறிக்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மகசீன் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் அண்மையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிச் செயற்பாடுகள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மற்றும் வழக்குத் தொடரப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அறிக்கை தயாரித்து வழங்குமாறு சிறைச்சாலை தலைமையகத்திற்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்திருந்தது.

கொழும்பு, மகசீன், அனுராதபுரம், மட்டக்களப்பு, பதுளை, களுத்துறை, பல்லேகலே உள்ளிட்ட சிறைச்சாலைகளில் 216 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பிலான விசேட அறிக்கையொன்று சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நயாகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related Posts