21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல் – அதிரடி அறிவிப்பு

21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் மே 31 வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டதைப் போலவே இந்த வார இறுதியிலும் நாடளாவிய ரீதியாக குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை 18.05.2021 ) வெளியிட்டுள்ளார்.

Related Posts