- Wednesday
- April 23rd, 2025

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார் நாடாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 18ஆம் திகதியும் பெரிய...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும்...

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்ட ரீதியாக பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை நேற்று...

2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) அன்று முடிவடையும். மேலும், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே...

நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக ”யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதும் , இம் மோதலுக்கான மூலக்காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை...

இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும். பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு...