ஆட்சேபனைகளை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் கால அவகாசம்!!

திர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர். பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை...
Ad Widget

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழ் காங்கிரஸ்!!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்று (19) பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சி – சுமந்திரன்

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால், எல்லாருக்கும் தெரிந்த விடயம், இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை...

பட்டலந்த பற்றி பேசும் அரசாங்கம் தமிழின அழிப்பு பற்றியும் விவாதிக்க வேண்டும் – சிறீதரன்

‘பட்டலந்த’ என்ற சொல்லின் ஊடாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம். தமிழர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையல்ல யென வாதிடும் நீங்கள் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை...