- Tuesday
- March 25th, 2025

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், ஒதுக்கப்பட்டுள்ள நிதி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (19) ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர். வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும்,...