- Friday
- February 21st, 2025

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரி பயன்படுத்தியதாக கூறப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி நீதிமன்றத்தில்...

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகர சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின்...

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்...

முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி...

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.