- Friday
- February 21st, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை...

மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளமை...

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம் என்றும், வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை...

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,750 ஆல் அதிகரிக்கப்படும். இது 2027 வரை மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு அரச ஊழியரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.5,975 ஆக உயர்த்தப்படும். மேலும், இதுவரை அரச ஊழியரின் சம்பளத்தில் சேர்க்கப்பட்ட...

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்’ நேற்றிலிருந்து (17) தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அழகரெத்தினம் வனகுலராசா என்னும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி, கடந்த 14 ஆம் திகதி முதல் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீர் மற்றும் உணவின்றி நீதி...

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று முதல் (18) கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு...